Entertainment
›
Cine News
›
களவாணி படம் பார்த்த பாரதிராஜா, பாக்யராஜ், அகத்தியன்-இயக்குநருக்குப் பாராட்டு
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் களவாணி படத்தை இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், அகத்தின் ஆகியோர் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். படத்த...
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் களவாணி படத்தை இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், அகத்தின் ஆகியோர் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். படத்தை இயக்கிய இயக்குநர் சற்குணத்தை வெகுவாகப் பாராட்டினர்.
விமல், ஓவியா நடிப்பில் வெளியாகும் களவாணி, பட்டி தொட்டியெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் விமல், நடிகை ஓவியாவின் நடிப்புக்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இயக்குநர் சற்குணத்திற்கும் மலை போல குவிந்து கொண்டிருக்கிறதாம் பாராட்டுகள்.
இந்த நிலையில் மதுரை மண்ணின் மைந்தரான பாரதிராஜா, மதுரை களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட களவாணி படத்தைப் பார்த்தார். அவருடன் இயக்குநர்கள் பாக்யராஜ், அகத்தியன் ஆகியோரும் பார்த்து ரசித்தனர்.
படத்தைப் பார்த்து முடித்ததும், இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் நசீர் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரையும் பாராட்டினார்கள் இந்த மூன்று மூத்த இயக்குநர்களும்.
ஏற்கனவே படத்தின் நாயகன் விமலை, இயக்குநர் பாலா வெகுவாகப் பாராட்டி, இயல்பாக நடிக்கிறாய் என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment