Kollywood Gossip | Kissu Kissu - இழுக்கும் இயக்கம் முழிக்கும் தயாரிப்பு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

ஈவினிங் டைம் மயக்கம் வர்ற படத்தை தயாரிக்கிறதுக்கு ஒல்லிப் பிச்சானோட தந்தைகுலம் ஏகப்பட்ட விநியோகஸ்தர்கிட்ட அட்வான்ஸ் வாங்கியிருந்தாராம்... வாங்கியிருந்தாராம்... இந்த நிலமையில படத்தோட ரைட்சை தெலுங்கு பார்ட்டிக்கு கொடுத்துட்டு செல்வமான மகன்குலம் படத்தை ஆரம்பிச்சிட்டாரு... ஆரம்பிச்சிட்டாரு... இதை கேள்விபட்டு பணம் கொடுத்த பார்ட்டிங்க, தந்தைகுலத்துக்கிட்ட பணத்தை திருப்பி கேட்க, திருதிருன்னு முழிக்குறாராம்... தந்தைகுலம் முழிக்குறாராம்... பஞ்சாயத்து சீக்கிரமே சங்கத்துக்கு போகப்போகுதாம்... போகப்போகுதாம்...

ராமாயண படத்தோட விளம்பரத்துல தான் புறக்கணிக்கப்படுறதா லாங்குவேஜ் ஹீரோ புலம்புறாராம்... புலம்புறாராம்... டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுன்னு சொல்லி தன்னை வில்லனாக்கியதோடு  புரமோஷன்லயும் கண்டுக்காம விட்டதுல, பிருத்வி நடிகரு கடுப்புல இருக்காராம்... இருக்காராம்... இருந்தாலும் பெரிய இயக்குனராச்சேன்னு மவுன ராகம் வாசிக்கிறாராம்... வாசிக்கிறாராம்...

அருபது நாள்ல படம்புடிச்சு சாதனை படைக்குறேன்னு கிளம்பின மில்க் இயக்குனரு, இப்போ நாற்பது நாள்ல கால்வாசி படத்தை கூட முடிக்கலையாம்... முடிக்கலையாம்... இன்னும் 100 நாள் இழுக்கும்னு சொல்லியிருக்காராம்... சொல்லியிருக்காராம்... இப்பவே முக்கால்வாசி பட்ஜெட்டை காலி பண்ணின தயாரிப்பு, மேற்கொண்டு பணம் செலவு பண்ணலாமா, இல்ல, இத்தோடு கழண்டுக்கலாமான்னு யோசனையில இருக்காராம்... தீவிர யோசனையில இருக்காராம்...

Comments

Most Recent