கிசு கிசு - சாதா நடிகை வருத்தம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

தம்பியை வச்சி லவ் படம் இயக்கிட்டிருந்தாரு செல்வ இயக்குனர். ஷூட்டிங் நடத்தினாலும் முழு திரைக்கதையும் எழுதி முடிக்கலையாம்... முடிக்கலையாம்... அதனால  லவ்வை தூரமா வச்சிட்டு, கைவசம் இருந்த ஆக்ஷன் கதையை தம்பிக்காக எடுக்கிறாராம்... எடுக்கிறாராம்... தலைப்பை மாத்தி, ரொமான்டிக் காட்சிகளுக்கு பதிலா ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிட்டு இருக்கிறாராம்... இருக்கிறாராம்...

பட வாய்ப்பே இல்லாத நிகி நடிகைக்கு ஒரு பாட்டு வாய்ப்பா வருதாம்... வருதாம்... அந்த மூணெழுத்து பெயர் படத்துல பாட்டோடு சில காட்சிகள்ல நடிக்கவும் வாய்ப்பு தந்தாங்க. அதனாலதான் கவர்ச்சியா ஆடினேன். அப்படி வாய்ப்பு தந்தா, நடிக்கிறேன்னு சொல்றாராம்... நடிகை சொல்றாராம்...

தமிழ்ல நடிச்சிட்டிருந்த ஒரே படமும் தள்ளிபோனதால சாதா நடிகை வருத்தமா இருக்கிறாராம்... இருக்கிறாராம்... அந்த படத்தை இயக்கிட்டிருந்த தாடிக்காரரு, தெலுங்கு படத்துக்கு போயிட்டாரு. அந்த படத்துல நடிக்க சாதாவை கேட்டாராம்... கேட்டாராம்... ஆறு ஹீரோயின்கள்ல ஒருத்தருங்கிறதால நடிக்க மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்...

Comments

Most Recent