10 டேக் வாங்கிய நடிகர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

துரோகி படத்தில் பூனம் பஜ்வா ஜோடியாக நடிக்கிறார் விஷ்ணு. படத்தில் இடம்பெறும் காதல் காட்சி ஒன்றில் பூனம் பஜ்வாவுடன் விஷ்ணு நெருக்கமாக நடிக்க வேண்டுமாம். இது பற்றி இயக்குனர் சுதா, விஷ்ணுவுக்கு விளக்கியுள்ளார். Ôஓகே, நான் ரெடிÕ என தெம்பாக விஷ்ணு சொன்னதும் கேமரா ஓடத் தொடங்கியுள்ளது. கேமரா முன் காட்சியில் நடிக்கும்போது, சொதப்பிவிட்டாராம் விஷ்ணு. காட்சி படமாகவில்லை. மீண்டும் அடுத்த ஷாட்டுக்கு ரெடியானார்கள். படபடப்பில் விஷ்ணுவுக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. அந்த ஷாட்டும் ஓகே ஆகவில்லை. இப்படி 10 டேக் வாங்கிய பின், 11வது டேக்கில்தான் அந்த காட்சியை முடித்திருக்கிறார் விஷ்ணு.காதல் காட்சிகளில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். அப்போது எனக்கு படபடப்பாக இருக்கும். Ôவெண்ணிலா கபடி குழுÕ படத்தில் நடிக்கும்போதும் அப்படித்தான் இருந்தது. பூனம் பஜ்வா கூலாக இருந்தார். என¢னால்தான் அது பல டேக்குகள் போனதுÕ என்றார் விஷ்ணு.

Comments

Most Recent