கவுதம் மேனன் இல்லாமல் 50 படம் முடிச்சிட்டேனே! - அஜீத்தின் கிண்டல் பதில்

http://thatstamil.oneindia.in/img/2010/08/28-ajith200.jpg
மூன்று முறை மீடியாவில் அஜீத்தை விமர்சித்து வெளிப்படையாக பேட்டிகள் கொடுத்திருந்தார் கவுதம் மேனன்.

ஆனால் ஒரு முறைகூட அதற்கு பதிலடி கொடுத்ததில்லை அஜீத்.

இப்போதுதான் முதல்முறையாக வாய்திறந்துள்ளார் அஜீத்.

'இனிமேல் அஜீத் எனக்குத் தேவை இல்லை' என்ற கௌதம் மேனனின் கமென்ட் குறித்த என்ன சொல்கிறார்?

"சினிமாவில் நான் இல்லாமல் 10 படங்களை கௌதம் இயக்கிவிட்டார். அவர் இல்லாமல் நானும் 50படங்களை முடித்துவிட்டேன். இதுதான் என் சிம்பிள் பதில்!

கார் ரேஸில் ஆர்வம் இருப்பதால், அதற்காக வெளிநாடு போவதால், சினிமாவில் கவனம் செலுத்தலைன்னு சொல்றது அபத்தம். நான் எதில் ஈடுபட்டாலும் அதிலேயே மூழ்கிவிடுவேன். அது என் இயல்பு. கார் ரேஸுக்குப் போனதால் ஓர் இடைவெளி ஏற்பட்டது உண்மைதான். அதற்காக அதிலேயே இருந்துவிடுவேன் என்று அர்த்தமல்ல. இதோ, மீண்டும் நான் வந்துட்டேனே!" என்றார்.

Comments

Most Recent