சத்யம் சினிமாஸ் நிறுவனம் சென்னையில் மேலும் 8 தியேட்டர்களை திறந்துள்ளது. ஏற்கனவே 6 தியேட்டர்களுடன் செயல்பட்டு வரும் சத்யம், ராயப்பேட்டை மண...
சத்யம் சினிமாஸ் நிறுவனம் சென்னையில் மேலும் 8 தியேட்டர்களை திறந்துள்ளது. ஏற்கனவே 6 தியேட்டர்களுடன் செயல்பட்டு வரும் சத்யம், ராயப்பேட்டை மணிகூண்டு எதிரே உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் 8 தியேட்டர்களை திறந்துள்ளது. இந்த தியேட்டர்கள் இன்று முதல் செயல்படும். எஸ்கேப் சினிமா என பெயரிடப்பட்டுள்ள இவற்றில் இரு தியேட்டர்கள் தலா 300 பேர் படம் பார்க்கும் வசதி கொண்டவை. மற்ற தியேட்டர்களில், தலா 120 பேர் படம் பார்க்க முடியும். இதுபற்றி சத்யம் சினிமாஸ் தலைவர் டான் நராங்கோ, நிருபர்களிடம் கூறும்போது, 'இந்த சிறிய தியேட்டர்களை நவீன வசதிகளுடன் அமைத்திருக்கிறோம். இங்கு காலை முதல் மாலை வரை பொழுதுபோக்க தேவையான அத்தனை அம்சங்களும் இருக்கிறது' என்றார்.
Comments
Post a Comment