ஷூட்டிங் நேரத்தில் நட்பான நட்சத்திரங்கள் கிண்டல், கேலி செய்துகொள்வதுண்டு. இப்போது அந்த கலாட்டா ட்விட்டர் அளவிற்கு வளர்ந்துள்ளது. திருமண க...
ஷூட்டிங் நேரத்தில் நட்பான நட்சத்திரங்கள் கிண்டல், கேலி செய்துகொள்வதுண்டு. இப்போது அந்த கலாட்டா ட்விட்டர் அளவிற்கு வளர்ந்துள்ளது. திருமண காட்சி ஒன்றில் நடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய திவ்யா, அக்காட்சியில் நடித்த அனுபவம் பற்றி எழுதினார். இதைப் படித்த அவரது நண்பரும், நடிகருமான தனுஷ் உடனே அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். 'திவ்யா உனக்கு திருமணம் ஆயிடுச்சா? சொல்லவே இல்ல. என்னுடைய வாழ்த்துக்கள்.
உன்னை மணந்துகொண்டவருக்கு என்னுடைய அனுதாபங்கள்' என்று கிண்டலாக அதில் குறிப்பிட்டிருந்தார். இதைப் படித்து சுர்ராகிப்போன திவ்யா, 'பொல்லாதவன் படத்தில் நீ (தனுஷ்) என்னை திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் இந்த படத்தில் திருமணம் செய்துகொண்டேன்! கேடி, உன்னை கொன்னுடுவேன். யார் என்னை திருமணம் செய்துகொள்கிறாரோ அவர் கொடுத்து வைத்தவர். கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர், அதிர்ஷ்டசாலி, போடா' என்று கிண்டலில் பதில் அனுப்பினார்.
Comments
Post a Comment