சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள எந்திரன் திரைப்படத்தின் பாடல்கள் உலகமெங்கும் விற்பனையில் புதிய சாதனை பட...
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள எந்திரன் திரைப்படத்தின் பாடல்கள் உலகமெங்கும் விற்பனையில் புதிய சாதனை படைத்து வருகிறது.
வெளியான முதல் 48 மணி நேரத்துக்குள் 3 லட்சம் சிடிக்களை விற்றுள்ள திங்க் மியூசிக் நிறுவனம், மேலும் 2 லட்சம் சிடிக்களை தயாரித்துள்ளது.
தமிழகம் மற்றும் இந்தியாவில் இந்த நிலை என்றால், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இணையதளம் மூலம் டவுன்லோடு செய்வதில் முதலிடத்தில் உள்ளது எந்திரன்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐட்யூன்ஸ் தரவிறக்கத்தில் அமெரிக்காவில் முதலிடத்தில் உள்ளது எந்திரன். இங்கிலாந்தில் கடந்த நான்கு தினங்களாக முதலிடத்தில் இருந்த எந்திரன், இப்போது மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது. ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் எந்திரன் ஆடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
எந்திரன் பாடல்கள் வெளியான மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் பாடல் சிடி விற்பனையில் புதிய சாதனையே படைத்துள்ளது எந்திரன் என்கிறது இதற்கான உரிமையைப் பெற்றுள்ள லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் நிறுவனம்.
இப்போதைய கணிப்பின்படி இந்தியாவில் மட்டும் 10 லட்சம் சிடிக்களுக்கு மேல் விற்பனையாகக் கூடும் என்கிறது திங்க் மியூசிக்.
Comments
Post a Comment