ஆமிர்கானூக்கு குவிகிறது கிராம மக்களின் தபால்

http://cinema.dinakaran.com/cinema/gallery/Bollywood-news-233.jpg
தங்கள் கிராமத்தின் பெயரில் சினிமா தயாரிக்கும் பாலிவுட் நடிகர் ஆமிர்கானுக்கு நன்றி தெரிவித்து ஆயிரக்கணக்கான கிராமத்தினர் தபால் கார்டு அனுப்பி வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமம் பீப்லி. அங்கு பிரமாண்ட செட் போட்டு தனது புதிய படத்தை தயாரித்தார் நடிகர் ஆமிர்கான். லகான் (2002), தாரே ஜமீன் பர் (2007), ஜானே...து ஜானே நா (2008) ஆகிய சொந்த படங்களுக்குப் பிறகு 4வதாக ஆமிர் தயாரிக்கும் படம் இது. விவசாயிகள் தற்கொலை, அதற்கு மீடியா, அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கதை அது.
‘பீப்லி லைவ்’ என்று படத்துக்கு ஆமிர் பெயரிட்டுள்ளார். இந்த தகவல் வெளியானதும், அவருக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான தபால்கள் வரத் தொடங்கின.

பீப்லி என்ற தங்கள் கிராமத்தின் பெயரில் படம் தயாரிப்பதற்கு நன்றி என்று அதில் விவசாயிகள், கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் பீப்லி என்ற பெயரில் கிராமங்கள் ஏராளம். அவற்றில் சில பீப்லி உமர்பூர், பீப்லி பதார், பீப்லி மெகாசந்த், பீப்லி பிஜாரே என துணை பெயர்களுடன் இருக்கின்றன. தபால்களை தங்கள் கைப்பட எழுதி அனுப்பும் கிராமத்தினரின் செயல், ஆமிர்கானை பெரிதும் கவர்ந்து விட்டது. அவற்றை பத்திரப்படுத்தியுள்ள அவர், பதில் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர்.

Comments

Most Recent