கிசு கிசு - போனில் காதல் வளர்க்கும் இசை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

அரசியல்ல புது ரூட்டை பிடிக்க ரோஸ் நடிகை முடிவு பண்ணியிருக்கிறாராம்... பண்ணியிருக்கிறாராம்... அதோடு, படம் தயாரிச்சு அதுல கணவர்குலத்துக்கு பிரேக் தரவும் பிளான் போட்டிருக்கிறாராம்... போட்டிருக்கிறாராம்...

பிரகாச வில்லன் நடிகருக்கு ஒத்தாசையா அவரோட புரொடக்ஷன் கம்பெனில சேரப்போறாராம் டான்சர் மனைவி. முதல் கட்டமா இந்தி நிறுவனங்களோடு சேர்ந்து தமிழ்ல படம் பண¢றதுக்கு மனைவிகுலம் பேசி வச்சிருக்கிறாராம்... வச்சிருக்கிறாராம்... இதனால நடிகர் முகத்துல ஓவர் பிரகாசம் தெரியுதாம்... தெரியுதாம்...

வெயில்ல மின்னிய இசை, ரகசியமா காதலை வளர்க்கிறாராம்... வளர்க்கிறாராம்... இசையோட காதலி காலேஜ் படிக்கிறாராம். அதனால வெளியிடங்களுக்கு ரெண்டு பேரும் ஒண்ணா போறதில்லையாம்... போறதில்லையாம்... போன்லேயே காதல் வளருதாம்... வளருதாம்...

Comments

Most Recent