கிசு கிசு - இயக்குனர் மீது விழுந்த இடி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

பிருத்வியான ஹீரோ, தன்னோட மலையாள படங்கள்ல ஹீரோயின் விஷயத்துல தலையிடுறாராம்... தலையிடுறாராம்... த்ரில்லரான படத்துல கவுர் நடிகை நீக்கத்துக்கு அவர்தான் காரணமாம்... காரணமாம்... இப்போ பெரிய கேமராமேன் கூட சேர்ந்து தமிழ், மலையாளத்துல ஹீரோ படம் தயாரிக்கிறாரு. அதுல ஜெனியான நடிகை வேணாம்னு ஹீரோ சொல்றாராம்... சொல்றாராம்... ஆனா படத்தை இயக்குற அந்த கேமராமேன் இதுக்கு ஒத்துக்கலையாம்... ஒத்துக்கலையாம்...

எல்லோரும் சுகம்னு சொல்ற படத்தை இயக்கியவர், அடுத்த படத்தை இன்னும் ஆரம்பிக்கல. அவரோட படத்தை மின்னலான இயக்குனர் தயாரிக்கிறதா சொன்னாரு... சொன்னாரு... பட்ஜெட்டை கேட்ட மின்னலானவர் மேல இடி விழுந்துருச்சாம்... இடி விழுந்துருச்சாம்... அதனால படம் தயாரிக்காம ஜகா வாங்கிட்டாராம்... ஜகா வாங்கிட்டாராம்...

கன்னடத்துல நடிச்சு வந்த படத்தை நயன நடிகை முடிச்சிட்டாரு... முடிச்சிட்டாரு... படத்தோட புரொமோஷனுக்கு ஹீரோவான உபேந்திர
நடிகரு கூப்பிட்டாராம்... கூப்பிட்டாராம்... Ôஎந்த பட புரொமோஷனுக்கும் நான் போறதில்லே; ஸாரிÕன்னு நடிகை மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்...

Comments

Most Recent