நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... ஐந்துலி நடிகையை முதலில் அறிமுகப்படுத்த இருந்தவர் கள இயக்குனர். அந்த படம் டிராப் ஆனதால...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
ஐந்துலி நடிகையை முதலில் அறிமுகப்படுத்த இருந்தவர் கள இயக்குனர். அந்த படம் டிராப் ஆனதால வேறு படத்துல நடிகை அறிமுகமாயிட்டாரு. ஆனாலும் டைரக்டருடன் இருந்த நட்பை விடாம தொடர்கிறாராம்... தொடர்கிறாராம்... நடிகைக்காக இன்னொரு கதையை டைரக்டர் ரெடி பண்ணியிருக்கிறாராம்... பண்ணியிருக்கிறாராம்... சில தயாரிப்புகளிடம் டைரக்டரை நடிகை சிபாரிசும் பண்ணியிருக்கிறாராம்... பண்ணியிருக்கிறாராம்...
டபுள் பேஸ் படத்தோட விழாவுக்கு கவர்ச்சி உடையில வலம் வந்தாரு புதுமுக சுகா நடிகை. விழாவுக்கு வந்த இயக்குனர்களுக்கு வணக்கம் வச்ச நடிகை, அப்படியே சான்ஸ் வேட்டையும் நடத்திட்டாராம்... நடத்திட்டாராம்... தன்னோட போட்டோ ஷூட் சிடியையும் சில இயக்குனர்களுக்கு கொடுத்து அனுப்பினாராம்... அனுப்பினாராம்...
சொல்ற மாதிரி படம் இல்லாததால காதல் நடிகை வருத்தத்துல இருக்கிறாராம்... இருக்கிறாராம்... தெலுங்குல திரும்ப தங்கச்சி ரோல்ல நடிக்க வாய்ப்பு வந்துச்சாம்... வந்துச்சாம்... ஒரு முறை அப்படி நடிச்சி, ஹீரோயின் இமேஜ் டேமேஜ் ஆயிடுச்சி. இனிமே அப்படி நடிக்க மாட்டேன்னு நடிகை சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...

Comments
Post a Comment