சன் டி.வி.யில் பொண்டாட்டி தேவை புதிய காமெடி தொடர்

http://cinema.dinakaran.com/cinema/gallery/Television-new-39.jpg
சரிகம இந்தியா நிறுவனம் தயாரிக்கும் தொடர் பொண்டாட்டி தேவை. காமெடி மெகா தொடரான இது சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை மாலை 5.30 மணிக்கு ஓளிபரப்பாகிறது.மனைவியால் அவதிப்படும் ஒருவனும் திருமணம் ஆகாமல் அவதிப்படும் ஒருவனும் பொய் சொல்லி பல பிரச்னைகளில் சிக்குகின்றனர். இதை கலகலப்பான காமெடி அம்சங்களுடன் சொல்கிறது இந்த தொடர். இதில் மயில்சாமி, சிட்டிபாபு, ராம்ஜி, சுதா சந்திரன், டி.பி. கஜேந்திரன், காந்திமதி, தேவிப்பிரியா, நீபா, சந்தோஷி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, நீடாமங்கலம் கே. சண்முகம். வசனம், எம். ரவிக்குமார். ஒளிப்பதிவு, தக்கலை தர்மராஜ். இயக்கம், எஸ்.மோகன்&எஸ்.செல்வக்குமார்.

Comments

Most Recent