உடையார் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் படம் 'இரண்டு முகம்'. சத்யராஜ், கரணுடன் சுஹானி, அனிகா என்ற இரு புதுமுகங்களும் நடிக்கிறார்கள்...
உடையார் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் படம் 'இரண்டு முகம்'. சத்யராஜ், கரணுடன் சுஹானி, அனிகா என்ற இரு புதுமுகங்களும் நடிக்கிறார்கள். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் தலைமையில் கே.பாக்யராஜ் வெளியிட, பார்த்திபன் பெற்றுக் கொண்டார். விழாவில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், இசை அமைப்பாளர் பரத்வாஜ், அனுஹாசன், எம்.எஸ்.பாஸ்கர், கவிஞர் பிறைசூடன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தயாரிப்பாளர் கே.வைத்தியலிங்க உடையார் வரவேற்றார். முடிவில் இயக்குனர் அரவிந்த்ராஜ் நன்றி கூறினார்.
Comments
Post a Comment