இன்றளவும் எழிலோடு வலம் வரும் முன்னாள் இந்திக் கனவுக் கன்னி ரேகா இந்தி சீரியலில் நடிக்கப் போகிறார். கங்கா கி தீஜ் என்று பெயரிடப்பட்டுள்...
இன்றளவும் எழிலோடு வலம் வரும் முன்னாள் இந்திக் கனவுக் கன்னி ரேகா இந்தி சீரியலில் நடிக்கப் போகிறார்.
கங்கா கி தீஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டிவி மெகா தொடரை ஹாரி பவேஜா தயாரிக்கிறார். இதில் நாயகியாக நடிக்கப் போகிறார் ரேகா.
இந்த தொடரில் கபீர் பேடியும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாகத்தான் ரேகா நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்தத் தொடர் குறித்து ரேகாவுடன் பேசி வருகிறார்களாம். அவர் சம்மதிப்பார் என்று நம்பப்படுகிறது.
இந்தித் திரையுலகில் ஒரு காலத்தில் கவர்ச்சிகரமான கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் ரேகா. அமிதாப் பச்சனுடன் இவர் நடித்த படங்கள் படு பிரசித்தம். அமிதாப்புடன் நெருக்கமாக இணைத்தும் பேசப்பட்டவர்.
சமீப காலமாக திரைப்படங்களில் பெரிய அளவில் நடிப்பதில்லை ரேகா. இந்த நிலையில் அவர் டிவிக்கு வரப் போவதாக நீண்ட நாட்களாகவே பேச்சு அடிபட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது ரேகா டிவி சீரியலில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் தற்போது அவர் நடிக்கவிருக்கும் சீரியல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளதால், ரேகா டிவிக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், ஷாருக்கான் போன்றோர் கேம் ஷோக்களை நடத்தியுள்ளனர். இந்த வரிசையில் தற்போது ரேகாவும் சேரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment