கற்பழிப்பு-விபச்சாரம்-சமீரா ‘ஹாட்’!

http://thatstamil.oneindia.in/img/2010/08/08-sameera-reddy-200.jpg

படு ‘ஹாட்’டாக இருக்கிறது சமீரா ரெட்டியின் மார்க்கெட். தமிழில் மீண்டும் தலை காட்டும் சமீரா தனது 3வது தமிழ்ப் படத்தில் விலைமாது கேரக்டரில் நடிக்கிறார்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழுக்கு வந்த சமீரா ரெட்டி, தொடர்ந்து அசல் படத்தில் தலை காட்டினார். அது சமீராவுக்கு பெரிய திருப்தியைத் தரவில்லை. ஆனால் தற்போது கெளதம் மேனனுடன் மீண்டும் இணைந்து இயங்கி வரும் சமீரா, நடுநிசி நாய்கள் படத்தில் பழைய கதாபாத்திரம் ஒன்றை சற்று வித்தியாசமாக செய்து வருகிறாராம்.

நடுநிசி நாய்கள் படத்தில் சமீராவுக்கு விலைமாது கேரக்டராம். திரில்லர் படமான இதில் சமீராவுக்கான பவர்ஃபுல் கேரக்டராம்.

இது இப்படி என்றால் நக்சலைட் வேடத்தில் சமீரா நடிக்கும் ரெட் அலர்ட் படத்தில் அதிர்ச்சிகரமான கற்பழிப்பு வேடத்தில் நடித்துள்ளாராம் சமீரா. இந்தக் காட்சியில் நடிக்கும்போது மிகவும் கஷ்டமாக உணர்ந்தாராம். படப்பிடிப்பு முடிந்த பிறகும் கூட சோகத்திலிருந்து அவர் விடுபடவில்லையாம்.

போலீஸ் நிலைய கழிப்பறையில் வைத்து போலீஸார் சமீராவை கற்பழிப்பதாக காட்சியாம். இந்த சம்பவத்திற்குப் பின்னர்தான் அவர் நக்சலைட்டாக மாறுகிறாராம். படத்தின் கதையும், தனது பாத்திரமும் நிறைய பாதித்து விட்டதாக கூறும் சமீரா, இதுவரை நான் நடித்த படங்களிலேயே இதுதான் என்னை மிகவும் பாதித்தது என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

Comments

Most Recent