எலெக்ட்ரா மலையாள படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. இதில் நயன்தாராவுக்கு அம்மாவாக நடித்திருப்பவர் மனிஷா கொய்ராலா. இதில் அப்பா வேடத...
எலெக்ட்ரா மலையாள படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. இதில் நயன்தாராவுக்கு அம்மாவாக நடித்திருப்பவர் மனிஷா கொய்ராலா. இதில் அப்பா வேடத்தில் நடிப்பவர் சில காட்சிகளில் மட்டுமே வருவார். ஆனால் படத்தில் முக்கிய வேடம் அது. கதைக்கு திருப்பமாக இருக்குமாம். இதில் நடிக்க பிரகாஷ் ராஜிடம் பட இயக்குனர் ஷியாம் பிரசாத் பேசியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடிப்பதால் கால்ஷீட் இல்லை என பிரகாஷ் ராஜ் கூறினாராம். பிரகாஷ் நடித்தால் இந்த வேடம் பேசப்படும் என்பது இயக்குனரின் கணிப்பு. இது பற்றி அறிந்த நயன், பிரபு தேவாவிடம் சொன்னதாக தெரிகிறது. பிரபு தேவா, நயன்தாராவுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக உள்ளார் இதனால் பிரகாஷ் ராஜிடம் பிரபு தேவா பேசினாராம். நயன்தாரா படத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினாராம். நண்பர் கேட்டதால் மறுக்க முடியாத பிரகாஷ், எலெக்ட்ரா படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக நடிக்க ஓகே சொன்னாராம். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை கடைசியாக எடுத்து முடித்துள்ளனர்.
Comments
Post a Comment