சகாக்கள் என்ன கதை?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வி.வி.வி. கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம் 'சகாக்கள்'. 'குளிர்', 'நீயும் நானும்' படங்களில் நடித்த சஞ்சீவ் ஹீரோ. அவர் ஜோடியாக பெங்களுரை சேர்ந்த கீர்த்தி அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு ஸ்ரீஅழகப்பன். பாஸ்கர் சக்தி வசனம். தயாரத்னம் இசை. யுகபாரதி பாடல்கள். படத்தை இயக்கும் எல்.எம்.கே.சுவாமி நிருபர்களிடம் கூறியதாவது:

இயக்குனர் திருமுருகனிடம் உதவி இயக்குனராக இருந்தேன். இப்போது இந்த படத்தை இயக்குகிறேன். குடும்பத்துடன் ரசிக்கும் காதல் கதைதான் படம். இதில் பழனி பாத யாத்திரை செல்லும் பக்தர்களிடையே நடக்கும் பரபரப்பான சம்பவங்கள், அதில் கலந்து செல்லும் காதலர்கள் என கதை களம் செல்லும். 'கண்டாங்கி சேலை கையோடு சேர' என்று தொடங்கும் பாடலுக்கு மும்பை மாடல் சுனாலி ஆடியிருக்கிறார். இந்த பாடலை ஹைவே ஓட்டல் ஒன்றில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கியுள்ளோம். இவ்வாறு சுவாமி கூறினார்.

Comments

Most Recent