‘துரோகி’ படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக பூர்ணா, விஷ்ணு ஜோடியாக பூனம் பஜ்வா நடித்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழாவில் விஷ்ணு தோள் மீது கை...
‘துரோகி’ படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக பூர்ணா, விஷ்ணு ஜோடியாக பூனம் பஜ்வா நடித்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழாவில் விஷ்ணு தோள் மீது கை போட்டு மிக நெருக்கமாக போஸ் கொடுத்தார் பூனம். அனைவரின் கண்களும் அந்த ஜோடி மீதே இருந்தது. விழாவில் நிருபர்களிடம் பேசிய பூர்ணா, 'எனக்கு வீட்டில் அண்ணன் இருக்கிறார். சினிமா இன்டஸ்ட்ரியில் எனக்கு அண்ணன் விஷ்ணுதான். ஒரு காட்சியில் என் முகத்தில் விஷ்ணு குத்தி நடித்தபோது அண்ணன் ஞாபகம்தான் வந்தது. அவனும் என்னை அப்படித்தான் அடிப்பான்Õ என்றார். உங்களுக்கு விஷ்ணு எப்படி என பூனம் பஜ்வாவிடம் கேட்டபோது, 'பூர்ணாவுக்குதான் விஷ்ணு அண்ணன். எனக்கு பாய் பிரெண்ட்Õ என ஒரே போடு போட்டார். Ôஷூட்டிங்கில் விஷ்ணுவும் பூனமும் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பார்கள். அந்த நெருக்கத்தைத்தான் போட்டோவுக்கு போஸ் தந்த போது நீங்கள் பார்த்தது.
விஷ்ணுவை பற்றி பூனம் சொன்னதிலும் உண்மை இருக்கலாம்Õ என பட யூனிட்டை சேர்ந்த ஒருவர் கூறினார்.
Comments
Post a Comment