சென்னை பாக்ஸ் ஆ ஃபிஸில் சென்ற வாரம் வெளியான நான் மகான் அல்ல, இனிது இனிது படங்கள் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்கள ைப் பிடித்துள்ளன. ...
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சென்ற வாரம் வெளியான நான் மகான் அல்ல, இனிது இனிது படங்கள் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்துள்ளன.
5. காதல் சொல்ல வந்தேன்
பூபதி பாண்டியன் இயக்கியிருக்கும் புதுமுகங்களின் காதல் சொல்ல வந்தேன் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதி மூன்று நாட்களில் 3.8 லட்சங்களை வசூலித்துள்ளது. முதல் பத்து தினங்களில் இந்தப் படம் 34 லட்சங்களை வசூலித்துள்ளது.
4. மதராசப்பட்டினம்
இயக்குனர் விஜய்யின் மதராசப்பட்டினம் ஆறு வாரங்கள் முடிவில் 3.91 கோடிகளை வசூலித்து லாபகரமான படம் என்ற பெயரை பெற்றிருக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 4.27 லட்சங்கள்.
3. வம்சம்
பாண்டிராஜின் வம்சம் முதல் பத்து தினங்களில் 53 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 10.7 லட்சங்கள்.
2. இனிது இனிது
கே.வி.குகன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதுமுகங்களின் இனிது இனிது பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது. முதல் மூன்று தினங்களில் இப்படம் வசூலித்திருப்பது 20.16 லட்சங்கள்.
1. நான் மகான் அல்ல
சுசீந்திரனின் நான் மகான் அல்ல அற்புதமான ஓபனிங்கை பெற்றுள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் வசூலித்திருப்பது 73.41 லட்சங்கள்.
Comments
Post a Comment