தா பாடல் வெளியீடு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஸ்ரேயா பிலிம்ஸ் சார்பில் ராஜேஷ் உத்தமன், கதிர், சைஜீ ஐசக், சந்திரசேகர் இணைந்து தயாரிக்கும் படம், 'தா'. புதுமுகங்கள் ஸ்ரீஹரி, நிஷா ஜோடி. ஒளிப்பதிவு, வி.எஸ்.தேவராஜ். இசை, ஸ்ரீவிஜெய். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி ஆர்.கே.சூர்ய பிரபாகர் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கார்த்தி வெளியிட, சமுத்திரக்கனி பெற்றுக்கொண்டார். டிரைலரை கே.பாக்யராஜ் வெளியிட, ஆர்.கே.செல்வமணி பெற்றுக்கொண்டார். வி.சி.குகநாதன், பவித்ரன், ஸ்ரீவிஜெய், ராஜேஷ் உத்தமன், செந்தில்குமார், ராபர்ட், ஸ்ரீஹரி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை விஜி தொகுத்து வழங்கினார். ஆர்.கே.சூர்ய பிரபாகர் நன்றி கூறினார்.

Comments

Most Recent