மிஷ்கின்.. கழற்றிவிட்டார் கமல்?!பின்னர் புத்தரின் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு மாபெரும் படம் ஒன்றை உருவாக்குகிறார்கள் என்றும் இதில் கமல் நாயகன், மிஷ்கின் இயக்குநர் என்றும் கமல் அலுவலகமே தகவல் கூறியிருந்தது நினைவிருக்கலாம். கமல் மற்றும் மிஷ்கின் இருவருமே இந்த விஷயத்தை மேடைகளில் கூறி வந்தனர்.

கமல்ஹாஸனின் அடுத்த படமே மிஷ்கின் இயக்குவதுதான் என்று உறுதியாக சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீரென உள்ளே புகுந்தார் ரவிக்குமார். உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் பெரும் பொருட் செலவில் புதிய படம் உருவாகிறது என்றும், இதில் கமல் ஹீரோ, த்ரிஷா அல்லது நயன்தாரா ஹீரோயின் என்றும் திடீர் அறிவிப்பு வெளியானது. உடனே, இதற்கடுத்த படத்தை மிஷ்கின் இயக்குவார் என்று கமல் தரப்பில் கூறப்பட்டது. கூடவே, ரூம் போட்டு கமலுக்காக மிஷ்கின் ஸ்கிரிப்ட் ரெடி செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

அடுத்து வந்த செய்தி, கமல் சொந்தமாக படம் தயாரிக்கிறார் என்றும், இதைக் கவுதமி இயக்க, பாலச்சந்தர் நடிக்கிறார் என்றும் வெளியானது. கமல் கவுரவ காமெடி வேடத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட இந்த முறை கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது மிஷ்கினுக்கு.

ஆனால் இந்த முறையும், கண்டிப்பாக கமலை வைத்து படம் இயக்குவார் மிஷ்கின் என்று சொல்லப்பட, தற்காலிக சமாதானம் அடைந்தார் மிஷ்கின். ஆனால் நேற்று வந்த தகவல்தான் அவரை ஒட்டுமொத்தமாக ஆடிப்போக வைத்துவிட்டதாம்.

உதயநிதி படத்துக்குப் பிறகு கவுதம் மேனனுக்கு கமல் கால்ஷீட் கொடுத்துவிட்டார் என்றும், தயாரிப்பாளராக பெரிய புளியங்கொம்பு மாட்டிவிட்டதால், பெரும் தொகை சம்பளமாகப் பேசப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்பட செம டென்ஷனாகிவிட்டாராம் மிஷ்கின்.

கமல் தரப்பிலோ ரொம்ப கூலாக, வருடத்தின் கடைசி நாளான இன்று மிஷ்கினுக்கு பைனல் செட்டில்மெண்ட் செய்து விட்டதாகச் சொல்கிறார்கள். எக்கச்சக்கமாய் பேசும் மிஷ்கின் தரப்போ எதுவும் சொல்வதற்கில்லை என்று உதட்டை இறுகக் கடித்தபடி அமைதி காக்கிறது.

விஷயம் சீக்கிரமே வெடிக்கும் என்கிறது கோடம்பாக்கம்.. பார்ப்போம்!

Comments

Most Recent