தெலுங்கானாவை ஆதரிக்காத நடிகர்கள் இனி ஹைதராபாதில் இருக்கக் கூடாது. உடனடியாக வெளியேற வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் மந்திரி போர்க்கொடி தூக்கிய...
தெலுங்கானாவை ஆதரிக்காத நடிகர்கள் இனி ஹைதராபாதில் இருக்கக் கூடாது. உடனடியாக வெளியேற வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் மந்திரி போர்க்கொடி தூக்கியுள்ளார்.
ஆந்திராவை பிரித்து தனி மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் பிரச்சினையில் டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவுக்கு முழு பெருமையும் போய்விடக் கூடாது என்பதால் காங்கிரஸ் கட்சி போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக சினிமா நடிகர்களைக் குறி வைத்து தெலுங்கானா போராட்டக்காரர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அவுட்டோரில் படப்பிடிப்பே நடக்க முடியாத நிலைஇருப்பதால், பல தெலுங்கு பட அதிபர்கள் சத்தமில்லாமல் சென்னைக்கு கிளம்பிவிட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜீவன் ரெட்டி ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
தெலுங்கானா தனி மாநிலத்திற்கு தற்போது ஹைதராபாத்தில் தங்கி உள்ள நடிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
தெலுங்கானாவை ஆதரிக்காத நடிகர்களுக்கு ஹைதராபாத்தில் என்ன வேலை? அவர்களுக்கு இனி இங்கே இடம் கிடையாது. அவர்கள் உடனடியாக ஹைதராபாத்தை விட்டு உடனடியாக அவர்கள் வெளியேற வேண்டும். இல்லை என்றால் அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இல்லாவிட்டால் நடிகர்கள் வையை மூடிக்கொண்டு தங்கள் வேலையை மட்டும் பார்க்கட்டும். யாராவது தெலுங்கானா பற்றி தொடர்ந்து விமர்சித்தால் காங்கிரஸ் தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள்..." என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment