நமீதா - மானமிகு தமிழர்களின் நடப்பு கனவுக்கன்னி!

ஒவ்வொரு காலகட்டத்திலும்  ஒரு நடிகை பெரும்பாண்மைத் தமிழ் ரசிகர்களை தூக்கம் வரை வந்து தொந்தரவு செய்திருக்கிறார். பத்மினி, ராகினி, ரோகினி , பாணுமதி, என்று கருப்பு வெள்ளை காலத்திலேயே இந்த உளவியல் தொற்று தொடங்கிவிட்டாலும், என்பதுகளின் தொடக்கத்தில்  அறிமுகமான ஸ்ரீதேவியின் வருகைக்குப் பிறகே இந்த கனவுக்கன்னி கருத்தியலுக்குள் கரைந்து போக ஆரம்பித்தார்கள் தமிழ் ரசிகர்கள்.

குஷ்பு, ரம்பா, சிம்ரன், ஜோதிகா என்று தொடந்த இந்த விளையாட்டு இப்போது நமிதாவில் வந்து நிற்கிறது. இந்த கனவுக்கன்னிகளில் பலருக்கு கோவில் கட்டவும் தயங்குவதில்லை மானமுள்ள தமிழர்களில் சிலர்.  தமிழர்களுக்கு கனவுக்கன்னியாகும் கவுரவம் கிடைக்க வேண்டுமானல், த்ரிஷா போல ஒள்ளியாகவோ, சமீரா ரெட்டிபோல ரெண்டுங்கேட்டான் போன்ற உருவத்திலோ அல்லது கோலிவுட்டின் இன்றைய ஹாட் கேக் என்று வருனிக்கப்படும் தமன்னா போல ஒரு மெழுகு பொம்மை தோற்றத்திலோ இருக்கக்கூடாது.

கொஞ்சம் குண்டான, சதைபிடிப்பான, உடலின் ஏதோ ஒரு பாகம் இயல்பை மீறிச் சற்றுப் பெரிதாகவோ இருக்கவேண்டும். (எ-கா...தமிழில் கேடி என்று ஒரேயொரு பட்த்தில் நடித்த கோவா ஆங்கிலோ இந்தியப் பெண் இலியான ஆந்திர சினிமாவில் கொடிகட்டிப் பறக்க... அந்தப் பெண்ணின் எக்ஸ்ட்ரா லார்ஜ் இடுப்புக்கு அடிமையான மதுரை ரசிகர்கள் அங்கே மன்றம் அமைத்து தங்கள் ரசனையைக்கட்டியிருக்கிரார்கள்) கண்களில் போதையும், குறும்பும் கொட்டி வைத்திருக்க வேண்டும். இப்படிப்பட்டப் பெண்களைத்தான் கனவுக்கன்னியாக வரித்துக் கொள்கிறார்கள்.

இதைப்பயன்படுத்திக்கொள்ளும் தமிழ் வெகுஜன அச்சு ஊடகத்தின் பல நாளிதழ்களும், பருவ இதழ்களும் கனவுக்கன்னியின் படத்தை பிரசுரிக்காவிட்டால் அன்று தமிழர்களுக்கு சாப்பாடு இறங்காது என்பதைபோன்ற கற்பனையில் கனவுக்கன்னியின் பட்த்தை போட்டு அவர்களது உளவியளை மேலும் பலவீனப்படுத்தி அவர்களது விற்பனையை பெருக்கிக் கொள்ளும் வேலையை கவணமாகச் செய்துவருகின்றனர். இப்படி அடிக்கடி இப்போது ஊடகங்களில் பயன்படுத்தப் படும் தமிழ் ரசிகர்களின் ரசனைக்குறியீடு நமீதா.

இதை சொல்லாமல் சொல்வது போலா நமிதாவை ஹீரோவாக்க் கொண்டு அழகான பொண்ணுதான் என்றோரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை தன்னுடைய அழகைக் காட்டி நடித்த நமிதா இதில் தன்னுடைய முழு நடிப்புத் திறமையும் வெளிப்படுத்தக்கூடிய ரோலில் நடிக்கிறார் என்று இயக்குனர், தயாரிப்பாளர் தரப்பில் சப்பைக்கட்டு கட்டினாலும், நமிதா எனும் நடப்பு கனவுக்கன்னியை கொண்டு தமிழ்ரசிகர்களின் பலகீனத்தை உச்சப்பட்சமாக சீண்டிப்பார்க்கும் ஒரு சில்லறைப் படமாகவே அதை எடுத்து வருகிறார்களாம். இதை ஆமோதிப்பது போல் இருக்கிறது அந்தப்படத்தின் கதை. அப்படி என்ன கதை என்கிறீர்களா?  அவர்கள் சொலலும் வித்தியாசமான கதை இதுதானாம்...

ஒரு அழகான கிராமம். மலையும் மலை சார்ந்த இடமான அந்த ஊருக்கு கோடை விடுமுறையைக் கழிக்க வருகிறான் ஒரு பதின் பருவ வாலிபன்.

வந்தவன் பார்வையில் ஒரு பெண் விழுகிறாள்.  இவள் தான் உலக அழகி என்று மயங்குகிறான். தன்னைவிட அழகானவள் என்பது மட்டுமல்ல வயதானவளும் கூட என்பது அவனுக்குப் புரியாமல் காதலிக்கிறான். ஒரு தலையாகக் காதலித்த அவன், காதலை அவளிடம் எப்படிச் சொல்கிறான்? அவள் ஏற்றுக் கொண்டாளா? இறுதியில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் படத்தின் கதை. இதில் நமிதாவை கற்பனையில் எண்ணி சல்லாபிக்கும் காட்சிகள் இல்லாமலா போய்விடும்.?

படத்தில்  முக்கிய பாத்திரத்தில்  நமிதா நடிக்கிறார். டீன் ஏஜ் வாலிபனாக புதுமுகம் ராஜா கார்த்திக் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரு இயக்குகிறார். படம் வந்தபிறகுதான், உண்மை ஊருக்கே புலப்படும் இது படமா அல்லது ... தமிழ் இளைஞர்களின் பலகீனத்தில் ஒங்கி அறைப்படும் லாடமா என்று...

Comments

Most Recent