'கோவா' பொங்கலுக்கு 'வரல'!



பொதுவாக பொங்கலுக்கு 10 படங்களாவது வெளியாகும். காரணம், பொங்கல்தான் பெரிய சீஸன். தொடர்ந்து நான்கைந்து நாள்கள் விடுமுறை என்பதால் பெரிய ஓப்பனிங் இருக்கும். அதிக படங்கள் வெளியானாலும் அந்த விடுமுறையில் வசூலை எடுத்துவிடலாம்.

ஆனால் தீபாவளியைப் போலவே இந்தப் பொங்கலுக்கும் ஜஸ்ட் 3 படங்கள் மட்டும்தான் வெளியாகின்றன. முக்கிய படமாக எதிர்ப்பார்க்கப்பட்ட கோவா, பொங்கலுக்கு ரிலீசாகாமல் பின்வாங்கிவிட்டது.

இப்போதைய நிலவரப்படி தனுஷ் நடித்த குட்டி, கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் மற்றும் லாரன்ஸ் - லட்சுமி ராய் நடித்த இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே இந்தப் பொங்கலுக்கு வெளியாகின்றன.

கோவா படம் கடைசி வரை வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதுவும், 'பொங்கலுக்கு வர்றோம்ல' என்று அவர்கள் வெளியிட்ட விளம்பரம் படம் பற்றிய எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.

ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்தப் படம் தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது வெளியாகவிருக்கும் மூன்று படங்களுமே பெரிய எதிர்ப்பார்ப்போ நட்சத்திரப் பட்டாளமோ இல்லாத படங்கள். ஓடுவதும் ஓடாததும் மக்களின் கையில்தான் உள்ளது.

Comments

Most Recent