கவர்ச்சிப் படங்களில் புது புரட்சியையே உண்டாக்கிய, ஷகிலாவுக்கு வரும் ஜூன் மாதம் திருமணம் நடக்கிறது. சென்னையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை அவர் கா...
கவர்ச்சிப் படங்களில் புது புரட்சியையே உண்டாக்கிய, ஷகிலாவுக்கு வரும் ஜூன் மாதம் திருமணம் நடக்கிறது. சென்னையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை அவர் காதலித்து திருமணம் செய்கிறார்.
இந்தத் தகவலை ஷகிலாவே நிருபர்களிடம் கூறினார்.
'பிட்' படங்களின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்தவர் ஷகிலா. இப்போதும் அவர் படத்துக்கு புறநகர் திரையரங்குகளில் ஏக மவுசு. இந்த பட விவகாரத்தில் ஷகிலா மீது இன்னும் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழக போலீஸார் போட்ட வழக்குகள் அவை.
இந்நிலையில், தனது ட்ராக்கை லேசாக மாற்றிக் கொண்டார் ஷகிலா. மலையாளத் திரையுலகிலிருந்து மீண்டும் தமிழுக்கு வந்துவிட்ட அவர், காமெடியுடன் சேர்ந்து கவர்ச்சி வேடங்களில் தோன்றி வருகிறார்.
சோட்டா மும்பை படத்தில் மோகன்லாலுடன் சில காட்சிகளில் நடித்துள்ளார். தமிழில் விஜய், ஜெயம் ரவி போன்ற நடிகர்களின் படங்களிலும் இடம்பெற்று வருகிறார்.
தனது திருமணம் குறித்து அறிவிப்பை நாச்சியார்புரம் படப்பிடிப்பில் வெளியிட்டார் ஷகிலா. அவர் கூறுகையில்,
எனக்கு பாதுகாப்பாகவும், துணையாகவும் இருந்தவர் என் அம்மா. அவர் கொடுத்த ஊக்கத்தில்தான் நான் 200 படங்களுக்குமேல் நடித்து முடித்தேன். சமீபத்தில், அம்மா மரணமடைந்து விட்டார்.
அந்த கவலையில்தான் மெலிந்து விட்டேன். முன்பு இருந்ததை விட, 20 கிலோ எடை குறைந்துவிட்டேன். அம்மா இறந்தபின், நான்தான் சமைக்கிறேன். நான் சமைத்த சாப்பாட்ட சாப்பிட எனக்கே பிடிக்கவில்லை. உணவு பழக்கவழக்கங்கள் மாறிவிட்டதால், என் உடல் மெலிந்து வருகிறது.
தொழிலதிபர்...
இனிமேல்தான் வாழ்க்கையில் ஒரு நல்ல துணை அவசியம் என்பதைப் புரிந்து கொண்டதால், இப்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். கடந்த ஆண்டே நடந்திருக்க வேண்டிய நிகழ்ச்சி இது.
மணமகன் எனக்கு நன்கு அறிமுகமானவர். ஒரு தொழிலதிபர். சென்னையில்தான் வசிக்கிறார். இப்போதைக்கு அவர் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. வேண்டுமென்றே அவர் மனதைச் சிலர் கலைக்கக் கூட முயற்சிப்பார்கள். இரண்டு ஆண்டுகளுக்குமேல் நாங்கள் காதலித்து வந்தாலும், வம்பு பேசுபவர்கள்தானே இந்தக் காலத்தில் ஜெயிக்கிறார்கள்!.
இது காதல் திருமணம் என்றாலும், என் வருங்காலக் கணவரின் பெற்றோர்களின் சம்மதத்துடன்தான் நடக்கிறது.
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நான் நடிப்பேன். அதற்கு எனக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் அவர் விதிக்கவில்லை. இப்போதும் என் கைவசம் 10 படங்கள் உள்ளன.
மலையாளப் பட உலகில் என்னை விரட்டிவிட்டார்கள் என்று கூறுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். சமீபத்தில் கூட சோட்டா மும்பை படத்தில் மோகன்லாலுடன் நடித்தேன்.
இப்போது நான் கவர்ச்சிப் படங்களில் நடிப்பதில்லை. குணச்சித்திர வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன்," என்ற ஷகிலாவிடம், 'நீங்க அழுதால் உங்கள் ரசிகர்கள் ரசிப்பார்களா?' என்று ஒரு கேள்வியை எழுப்பினர் நிருபர்கள்.
அதற்கு அவர், "இதுக்கு மேல வேற என்ன எதிர்பார்க்கப் போகிறார்கள்... பதினைந்து வருடங்களுக்கு முன்பு ரசிகர்கள் என்னை கவர்ச்சியாக மட்டும் பார்க்க ஆசைப்பட்டார்கள். இப்போது அந்த ஆசை மாறியிருக்கும் என நம்புகிறேன.." என்றார்.
Comments
Post a Comment