தெலுங்கானாவுக்கு எதிராகக் குரல் கொடுத்தால் சிரஞ்சீவியை உதைப்போம் என தெலுங்கானா போராட்டத்தை நடத்திவரும் சந்திரசேகர ராவின் மருமகன் மிரட்டியுள்...
தெலுங்கானாவுக்கு எதிராகக் குரல் கொடுத்தால் சிரஞ்சீவியை உதைப்போம் என தெலுங்கானா போராட்டத்தை நடத்திவரும் சந்திரசேகர ராவின் மருமகன் மிரட்டியுள்ளார்.
தெலுங்கானா போராட்டம் இன்று உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. தெலுங்கானா மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் இன்று முழு அடைப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், வரும் ஜனவரி 3ம் தேதி ஹைதராபாத்தை முற்றுகையிடப் போவதாக தெலுங்கானா ஆதரவு மாணவர்கள் அமைப்பு அறிவித்துள்ளது. இதனால் உண்டாகப்போகும் கலவரத்தை நினைத்து ஹைதராபாத் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். பல வணிக நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டன. வெளியூர்காரர்கள் ஹைதராபாத் நகரைவிட்டு எப்படியாவது வெளியேறினால்போதும் என்று கிளம்பிச் செல்கின்றனர்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய மாநில அரசு மாணவர்கள் நடத்தும் வன்முறையை வேடிக்கை பார்த்து வருவதாக ஆந்திராவில் உள்ளவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்நிலையில் சந்திரசேகரராவ் மருமகன் ஹரீஷ் ராவ் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிம் பேசுகையில்,
நடிகர் சிரஞ்சீவி, விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் போன்றோர் தற்போது தெலுங்கானாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார்கள். உண்மையில் அவர்களுக்கு தைரியம் இருந்தால் இந்த பிரசாரத்தை அவர்கள் தெலுங்கானா பகுதியில் செய்ய வேண்டும்.
சிரஞ்சீவி தெலுங்கானாவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தால் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் அவரை அடித்து உதைப்பார்கள் என்று எச்சரிக்கிறேன். இனி தெலுங்கானா பகுதியில் சிரஞ்சீவி படமோ அவரது மகனின் படமோ திரையிடுவதை அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
எங்களுக்கு தனி மாநிலம் தர மத்திய அரசு முன்வந்தபோது சிரஞ்சீவி போன்ற தலைவர்கள் இடையில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அவர்களை தெலுங்கானா மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.
Comments
Post a Comment