Entertainment
›
Cine News
›
'எனக்குப் பெருமை இந்தியன் என்பதில்தான்... முஸ்லிம் என்பதில் அல்ல!'- ஷாரூக்
உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க டாப் 500 முஸ்லிம்களில் ஒருவராக முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல்கலாம், ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ஷாரூக் க...
உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க டாப் 500 முஸ்லிம்களில் ஒருவராக முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல்கலாம், ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ஷாரூக் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷாரூக்கான், என்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதைவிட, ஒரு இந்தியன் என்று மட்டும் அடையாளம் காட்டிக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.
அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக் கழகம் சமீபத்தில் இந்தப் பட்டியலை வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து ஷாரூக்கானிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், "எனக்கு இந்த மாதிரி பட்டியல்களில் நம்பிக்கை இல்லை. நான் ஒரு சினிமா கலைஞன். என் வேலையை கடந்த 18 ஆண்டுகளாக சரியாகச் செய்து வருவதாக நம்புகிறேன். என் வேலையை நான் ஒழுங்காக செய்ததாலேயே இந்த அளவு முக்கியத்துவம் பெற்றவனாக உள்ளேன்.
நான் ஒரு முஸ்லிம் என்பதில் எனக்கு பெருமைதான். ஆனால் இந்த சமூகத்தில் நான் சுதந்திரமாக கல்வி கற்று, திரைத்துறையில் முன்னேறக் காரணமான என் நாடுதான் எனக்கு அனைத்திலும் விட பிரதானம். எனவே என்னை ஒரு பெருமைக்குரிய இந்தியக் கலைஞன் என்று சொன்னாலே போதும். அதுதான் எனக்கு சரியான அடையாளம்" என்றார்.
ஷாரூக்கான் அடுத்து நடித்துக் கொண்டிருக்கும் படம் மை நேம் ஈஸ் கான். இதில் மனித நேயத்தை வலியுறுத்தும் முஸ்லிம் பாத்திரத்தில் தோன்றுகிறார் ஷாரூக்கான்.
Comments
Post a Comment