த்ரிஷாவால் நிம்மதியிழந்த நயன்!



உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகும் கமல்ஹாஸன் பட ஹீரோயின் வாய்ப்புக்காக பெரிய மியூசிக்கல் சேர் போட்டியே நடந்து வருகிறது.

இந்தப் படத்துக்கு முதலில் பேசப்பட்ட நடிகை தமன்னா. அவரும் ரொம்ப ரொம்ப ஆசையுடன் காத்திருந்தார். முத்தத்துக்கு கூட ரெடி, ஆனா கணிசமா சம்பளம் கொடுத்துடுங்க என்று கூறியிருந்தாராம்.

ஆனால் திடீரென்று இதில் ஒரு மாற்றம்... பிரபுதேவா, கேஎஸ் ரவிக்குமார் என ஏகப்பட்ட சப்போர்ட்டோடு ஹீரோயின் வாய்ப்புக்கு அடிபோட்டு வந்தார் நயன்தாரா.

அவர்தான் கமலின் அடுத்த நாயகி என செய்திகள் வெளிவரத் துவங்க, சந்தோஷத்தில் மிதந்த நயனுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை இன்று த்ரிஷா வெளியிட்டுள்ளார்.

தமிழில் பெரிய படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாகவும், இந்தியில் இப்போது நடிக்கும் காட்டா மிட்டா படம் முடிந்ததும், மீண்டும் தமிழுக்குப் போய்விடுவேன் என்றும் கூறியிருந்தார்.

'அதென்ன பெரிய படம்... கமலுடன் நடிக்கிறீர்களா?' என்று கேட்டதற்கு, 'கமலுடன் நடிக்க நான் ஏற்கெனவே ஒப்பந்தமாகியிருந்தது தெரியாதா?' என்று திருப்பிக் கேட்டுள்ளார்.

கமல் நடித்து இயக்கலிருந்த மர்மயோகி படத்தின் நாயகியாக ஒப்பந்தமானவர் த்ரிஷா. இந்தப் படத்துக்காக அவருக்கு முன்ஒத்திகையெல்லாம் நடத்தப்பட்டது. கமல் ஹாஸன் தன் அலுவலகத்தில் வைத்து த்ரிஷாவுக்கு பயிற்சியும் கொடுத்தார்.

ஆனால் மர்மயோகி டிராப்பானதும் அதன் பிறகு நடந்ததும் தெரியுமல்லவா...

Comments

Most Recent