லாரன்ஸ் கட்டிய ராகவேந்திரர் கோயில்!இயக்குநர்-நடிகர்- நடன இயக்குநர் என பல முகங்கள் கொண்ட ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள ராகவேந்திரர் கோயில் பொதுமக்கள் வழிபடுவதற்காக வரும் ஜனவரி 1ம் தேதி திறக்கப்படுகிறது.

ஆவடி- அம்பத்தூர் இடையே அமைந்துள்ள திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் 8 கிரவுண்டில் இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது.

தன்னை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய குரு ரஜினி வந்து இந்தக் கோயிலைத் திறந்து வைப்பார் என்று முன்பு கூறியிருந்தார் லாரன்ஸ். ஆனால் இப்போது அதுபற்றி எதுவும் கூறவில்லை.

கோயில் திறப்பு பற்றி லாரன்ஸ் கூறுகையில், " ராகவேந்திரர் கோவிலின் திறப்பு விழா வருகிற 1ம் தேதி நடக்கிறது. அன்று முதல் பொதுமக்கள் கோவிலில் பூஜைகள் செய்யலாம்.

பக்தர்கள் கவனம் சிதறும் என்பதால் திறப்பு விழாவுக்கு நடிகர், நடிகைகளை அழைக்க வில்லை. 48 நாட்கள் கழித்து நடைபெறும் விழாவில் அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளையும் அழைக்க இருக்கிறேன்" என்றார்.

ஏற்கெனவே லாரன்ஸ் அறக்கட்டலை எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்தி வரும் லாரன்ஸ், ஊனமுற்ற இளைஞர்களை நடனக் கலைஞர்களாகவும் உருவாக்கி வருகிறார்.

ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு கணிசமான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

Comments

Most Recent