இந்திய திரைப்பட சம்மேளன​ தலைவரானார் சுரேஷ்


சென்னை,​​ டிச.23:இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவராக ஆனந்தா பிக்ஸர்ஸ் நிர்வாகி எல்.சுரேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.​ இந்திய திரைப்பட உலகம் முழுமைக்கும் தலைமையான இந்நிறுவனத்தின் தலைவராக 1994-ம் ஆண்டு ஏவி.எம் சரவணன் இருந்தார்.​ அவருக்குப் பின் இப்பதவியை வகிக்கும் தமிழர் சுரேஷ் ஆவார்.

2001-ல் இவரின் முதல் திரைப்படமான "ஊருக்கு நூறு பேர்' ஜனாதிபதியின் தங்கத் தாமரை விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.​ 2001 முதல் மத்திய அரசின் திரைப்படத் தணிக்கைக் குழுவில் சிறப்பு உறுப்பினராக உள்ள இவர்,​​ தென்னிந்திய திரைப்பட ஏற்றுமதி சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

Comments

Most Recent