பிப்ரவரியில் 'அசல்'

"அசல்' படத்தின் படப்பிடிப்பை மலேசியா,​​ சிங்கப்பூர்,​​ பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் முடித்து திரும்பி விட்டார்கள்.​ 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.​ இறுதிக் காட்சி தவிர அஜீத்,​​ சமீரா தோன்றும் டூயட் பாடல் ஏவி.எம்.ஸ்டியோவில் படமாக்கப்பட்டுள்ளது.​ படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் அஜீத் பேசும் வசனக் காட்சி,​​ சிவாஜிகணேசன் வீட்டில் படமாக்கப்பட்டுள்ளது.​ படப்பிடிப்புடன் படத்தொகுப்பு பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது.​ மற்றுமொரு பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்படுகிறது.​ இத்துடன் இப்படம் முடிகிறது.​ பொங்கல் பண்டிகை அல்லது குடியரசு தின நாளில் படத்தை வெளியிடத் திட்டம் இருந்தது.​ இறுதிக் கட்டப் பணிகள் முடியாததால்,​​ பிப்ரவரி முதல் வாரத்தில் "அசல்' திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Most Recent