அடுத்த நான்கு வாரங்களுக்குள் இயக்குநர் அமீர் ரூ 50 லட்சத்துக்கான வங்கி உத்தரவாதம் தரவேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மே...
அடுத்த நான்கு வாரங்களுக்குள் இயக்குநர் அமீர் ரூ 50 லட்சத்துக்கான வங்கி உத்தரவாதம் தரவேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
பருத்தி வீரன் படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என்பவர், இயக்குனர் அமீர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், அமீர் ரூ.1 கோடி பாக்கி தரவேண்டும். பணத்தை தராமல் யோகி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் மனோகர், சகாதேவன் ஆகியோர் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.50 லட்சத்துக்கான வங்கி உத்தரவாதத்தை இயக்குநர் அமீர் தாக்கல் செய்யவில்லை என்றனர்.
இதை கேட்ட நீதிபதி, இயக்குனர் அமீர் 4 வாரத்துக்குள் வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும். தவறினால் அவரது அசையா சொத்துக்களை முடக்குவது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று உத்தரவிட்டார்.
ஆனால் பருத்தி வீரன் தயாரிப்பாளர்கள் தனக்கு இன்னும் ரூ 80 லட்சம் வரை சம்பள பாக்கி தரவேண்டும் என்று அமீர் கொடுத்த புகார் இன்னும் அப்படியே உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment