சல்மானுக்காக அப்பாவை விரட்டினேனா? - அசின்சல்மான் கான் சொல்லித்தான் என் அப்பாவை வீட்டுக்கு வரவிடமால் செய்தேன் என்று வரும் செய்திகள் என்னைப் புண்படுத்துகின்றன என்று கூறியுள்ளார் நடிகை அசின்.

அசின் மும்பையில் செட்டிலான பிறகு அவரைப் பற்றி பல்வேறு செய்திகளும் வதந்திகளும் வந்தவண்ணம் உள்ளன.

இதில் லேட்டஸ்ட் அவரையும் சல்மான்கானையும் இணைத்து வரும் கிசுகிசுக்கள்தான்.

மும்பையில் அசினுக்காக சல்மான்கான் ஒரு பெரிய வீடு வாங்கித் தந்திருப்பதாகவும், இந்த வீட்டில் அசின் மட்டுமே தனியாக வசிப்பதாகவும் முன்பு கூறப்பட்டது. ஆனால் இதனை பலமாக மறுத்தார் அசின்.

பின்னர், அசினின் வேலைக்கு இடையூறாக இருக்காததால் அவரது பெற்றோர் மும்பையிலேயே தனி வீட்டில் உள்ளதாகக் கூறப்பட்டது.

இப்போது, சல்மான்கான்தான் அசின் பெற்றோர் புதிய வீட்டுக்கு வரக்கூடாது என்று கூறிவிட்டதாகவும், அசின் நன்மைக்காகவே இதை அவர் செய்துள்ளதாகவும் மும்பை பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதைப் பார்த்ததும் கொதித்துப் போன அசின், "இதற்கெல்லாம் என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள்... என்ன தெரியும் என்று எழுதுகிறார்கள்? இந்த செய்திகள் என்னை எந்த அளவு புண்படுத்துகின்றன தெரியுமா...

எனக்கு சன்மான் கான் வீடு வாங்கித் தரவில்லை. அவருக்கும் எனக்கும் காதலும் இல்லை. மும்பையில் எனக்கு இன்னொரு வீடு இருப்பது உண்மைதான். ஆனால் பெரும்பாலும் நான் என் அப்பா அம்மா இருக்கும் வீட்டில்தான் இருக்கிறேன். வேறு எதுவும் உண்மையில்லை" என்கிறார்.

Comments

Most Recent