'பஞ்ச தந்திரம்', 'காதலா காதலா', 'பம்மல் கே.சம்பந்தம்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த பி.எல்.தேனப்பன் தயாரித்து வரு...
'பஞ்ச தந்திரம்', 'காதலா காதலா', 'பம்மல் கே.சம்பந்தம்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த பி.எல்.தேனப்பன் தயாரித்து வரும் புதிய படம் 'அய்யனார்'.
இதில் 'ஈரம்', 'மிருகம்' படங்களில் நடித்த ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். மீராநந்தன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம், சூரி, ரவிகாளே, சரண்யா, சுசித்ரா, பாலிவுட் வில்லன் நடிகர் ஆர்பிட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குபவர் எஸ்.எஸ்.ராஜமித்ரன்.
ஊரே மெச்சும் ஓர் இளைஞனை அவனது குடும்பத்தார் வெறுத்து ஒதுக்குகிறார்கள். அதற்கான காரணத்தையும்அதையடுத்து நடைபெறும் சம்பவங்களையும் ஆக்ஷன் பின்னணியில் விறுவிறுப்பாகச் சொல்வதுதான் கதை. படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார் இயக்குநர்.
இசை - தமன் எஸ். பாடல்கள் - நா.முத்துக்குமார், யுகபாரதி, தாமரை, விவேகா. கலை - ஸ்ரீ படத்தொகுப்பு - மு.காசிவிஸ்வநாதன். தயாரிப்பு - ஸ்ரீராஜலட்சுமி பிலிம் பி.லிட்.

Comments
Post a Comment