தமிழில் அஜீத், விக்ரம் என முன்னணி நாயகர்களுடன் நடித்து, பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார் சதா. தமி...
தமிழில் அஜீத், விக்ரம் என முன்னணி நாயகர்களுடன் நடித்து, பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார் சதா.தமிழில் முன்னணி இடத்துக்கு வர முடியவில்லையே? தமிழில் நான் நடித்தது அனைத்துமே கமர்ஷியல் படங்கள்தான். ரசிகர்களிடம் அந்தப் படங்கள் எல்லாம் நன்றாகத்தான் போய் சேர்ந்தது. அனைத்துமே வெற்றிப் படங்கள்தான். கமர்ஷியல் படங்கள் எந்தளவுக்கு பெயரை வாங்கித் தருமோ அந்த அளவுக்கு தமிழில் பெயர் எடுத்திருக்கிறேன். இதை மீறி நான் பேசப்பட வேண்டுமானால் ஆர்ட் படங்களில்தான் நடித்திருக்க வேண்டும். அந்த மாதிரியான படங்களும் என் எதிர்பார்ப்பில் இருக்கிறது. வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். மற்றப்படி தமிழில் முன்னணி நடிகையாகதான் இருந்தேன்.ஹிந்தியில் குறிப்பிட்ட இடம் கிடைக்குமா? "கல்பலி', "க்ளிக்' உள்ளிட்ட சில படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. "லவ் கிச்சடி' ரிலீசாகி நன்றாக போய்கிறது. நல்ல படம் என விமர்சனங்கள் கிடைத்துள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவு போகவில்லை. மற்ற சினிமாக்களை விட ஹிந்தி சினிமாவில் போட்டி அதிகம். தமிழ், தெலுங்கு, மலையாள நடிகைகள் ஹிந்தி சினிமாவின் முன்னணி இடத்துக்கு ஆசைப்படுகிறார்கள். எல்லோருமே தங்கள் துறையில் குறிப்பிட்ட இடத்துக்குதான் போட்டி போடுகிறோம். அந்த மாதிரியான போட்டியில் நானும் இருக்கிறேன்.ஹிந்தியிலும் கமர்ஷியல் படங்களா? கமர்ஷியல் சினிமாக்கள் மட்டும்தான் நடிகையை விரைவில் அடையாளம் காட்டும் என நினைக்கிறேன். தமிழ் மற்றும் மலையாளத்தில் கமர்ஷியல் சினிமாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான் ரசிகர்கள் இன்னும் என்னை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். ஹிந்தியிலும் கமர்ஷியல் சினிமாக்கள் செய்யதான் ஆசை இருக்கிறது. அந்த மாதிரியான சினிமாக்கள்தான் என்னை தேடியும் வருகிறது. இருந்தாலும் கேரக்டர் ரோலுக்கு அவ்வப்போது முக்கியத்துவம் கொடுப்பேன்."நான் அவள் அது' என்னாயிற்று? மூன்று வருடத்துக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட படமிது. தயாரிப்பாளர்களுக்கு பல பிரச்னைகள். அதுதான் அந்தப் படத்தின் ரிலீசுக்கு தாமதம் என நினைக்கிறேன். படம் பாதியில் நின்றிருந்தாலும் விட்டு விடலாம். ஆனால், படம் முழுவதும் முடிந்தும் ரிலீசாகவில்லை. அதனால் கொஞ்சம் வருத்தம் இருக்கிறது.தமிழ் சினிமா பக்கம்..... நான் முதலில் ஒரு சினிமா நடிகை. கதை பிடித்திருந்தால் எந்தப் படத்திலும், யார் கூப்பிட்டாலும் நடிக்க தயார். நல்ல கதை, கேரக்டர் கிடைக்க வேண்டும். தமிழில் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் "அந்நிய'னும், "உன்னாலே உன்னாலே' படங்கள்தான் ஞாபகத்தில் வந்து விட்டு போகிறது. அதற்கு காரணம் நல்ல கதை என்பதை விட வெற்றி பெற்ற படங்கள் என்பதுதான் முக்கிய காரணம். "உன்னாலே உன்னாலே' வாய்ப்புக்குப் பின் நல்ல கதைகளை எதிர்பார்த்தேன் கிடைக்கவில்லை. அதனால்தான் தமிழில் நடிக்கவில்லை.திருமண செய்திகள் வருதே? சினிமாவில் பிஸியாக இருக்கும் போது திருமணத்தைப் பற்றி எப்படி யோசிக்க முடியும்? திருமணத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது.
இப்போதைக்கு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வாய்ப்புகள் வந்தாலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். திருமணம் பற்றி யோசிக்க சில வருடங்கள் ஆகும்.
Comments
Post a Comment