'கொடுத்து வைத்த குதிரை...' நெளிய வைத்த வைரமுத்து!

'கொடுத்து வைத்த குதிரை...' நெளிய வைத்த வைரமுத்து!


ரஜினி மேடை, கமல் மேடை, கலைஞர் மேடை... இப்படி மேடைக்கேற்றபடி நெளிவு சுளிவுடன் பேசுவதில் பிஎச்டி வாங்கியவர் வைரமுத்து. ஆளுக்கேற்ப பேசுவதிலும் அசகாய சூரர்.

நேற்று நடந்த இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மேடையில், நடிகைகளை அவர் வர்ணித்ததைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்களே நெளிய வேண்டி வந்ததாம். நம்ம வைரமுத்துவா என்று சிலர் சற்றே முகம் சுளிக்கவும் செய்தார்களாம்.

எல்லோரும் கௌபாய் கதையைத் தேர்வு செய்த சிம்புதேவனைப் பாராட்டிக் கொண்டிருக்க, கவிஞர் வைரமுத்து மட்டும் நடிகை லட்சுமிராயை உச்சத்தில் வைத்துப் புகழ்ந்து தள்ளினார்.

அவர் பேசுகையில், "லட்சுமிராய் இந்த படத்தில் குதிரையில் ஏற்றமெல்லாம் செய்திருக்கிறார். உண்மையில் அந்த குதிரை கொடுத்து வைத்த குதிரை... இப்படி ஒரு வாய்ப்பு எந்தக் குதிரைக்கு கிடைக்கும்" என்ற ரீதியில் பேச, அதனைக் கேட்டு லட்சுமிராய் நெளிந்தபடி சிரித்து வைத்தார்.

இதில் ஹைலைட்டான விஷயமே, விழா முடிந்ததும் அனைவரிடமும் விடைபெற்றுச் சென்ற வைரமுத்து, தனது காரிலேயே லட்சுமிராயை கூட்டிச் சென்றதுதான்.

வைரமுத்துவின் காரும் கொடுத்து வைத்ததோ!

Comments

Most Recent