ஹீரோயின் இல்லை

"யோகி'க்குக்குப் பின் சுப்பிரமணிய சிவா இயக்கும் "சீடன்' படத்தில் தனுஷ் ஜோடியாக "நாடோடிகள்' அனன்யா நடிக்கிறார்.​ ""படத்தில் தனுஷ் ஜோடியாக நான் நடிக்கவில்லை.​ ஆனால் நான்தான் படத்தின் ஹீரோயின்.​ இந்த கேரக்டர் என்னவென்று நீங்கள் படத்தில்தான் பார்க்க வேண்டும்.​ தெலுங்கில் கிருஷ்ணா ஜோடியாக "மைக்குடு' படத்தில் நடிக்கிறேன்.​ இதைத் தவிர மலையாளத்தில் மோகன்லாலுக்கு மகளாக நடிக்க போகிறேன்.​ அனைத்து படங்களிலும் நடிக்க ஆர்வம் இல்லை.​ நல்ல கேரக்டர்கள் மட்டுமே என் விருப்பம்'' என்கிறார் அனன்யா.

Comments

Most Recent