நடிகைகளின் புத்தாண்டு கொண்டாட்டம்!



நடிகர் நடிகைகள் பங்கேற்கும் புத்தாண்டு கலை நிகழ்ச்சிகள் வரும் டிசம்பர் 31ம் தேதி சென்னை ஒய்எம்சிஏ திடலில் நடக்கிறது.

தேஜா ஸ்ரீ, அக்ஷயா, தருணா, நிகிஷா, கீர்த்தி சாவ்லா என தற்போது பீல்டில் பிஸியாக இல்லாத நடிகைகள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஆட்டம் போடுகின்றனர்.

எச்.வசந்தகுமார் தலைமையில் வசந்த் டி.வி. குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் நடிகை ரம்பா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

சங்கரின் சாதகப் பறவைகள் நடத்தும் இசைக் கச்சேரியில் பிரபல சினிமா பின்னணி பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், மஹதி, அனிதா, மாணிக்கம் விநாயகம், சுந்தரம், நாக்கமுக்கா பாட்டுப் புகழ் சின்ன பொண்ணு ஆகியோர் கலந்து கொண்டு பாடுகிறார்கள்.

கேரளா ஏரோபிக் குழுவினரின் அதிரடி காட்சிகள், ஜான்பிரிட்டோ குழுவினரின் நடனம், மேஜிக் ஷோ, மிமிக்ரி அழகிகளில் பேஷன் ஷோ, வாணவேடிக்கை போன்ற என நள்ளிரவு தாண்டியும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடக்கின்றன.

விருது விழா:

இதைத் தவிர டைமண்ட் பாபு தலைமையிலான வி 4 குழுவினர் நடத்தும் விருது வழங்கும் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் புத்தாண்டு தினத்தன்று லேடி ஆண்டாள் பள்ளியில் நடக்கிறது. சிறந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர், இயக்குநர் பலருக்கும் விருது வழங்கப்படுகிறது.

நடிகர் நடிகைகள் நடனம் மற்றும் இசை கச்சேரியும் நடக்கிறது.

ஹோட்டல்களில்...

புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தாலும், அதையும் மீறு பல நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு தினத்துக்கு முந்தைய நாள் இரவு முழுவதும் விடிய விடிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புறநகர் பகுதி க்ளப்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து பல்வேறு விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

Comments

Most Recent