சௌந்தர்யா ரஜினிகாந்தின் முதல் தயாரிப்பாக வெளிவரும் கோவா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் வரும் ஜனவரி 4-ம் தேதி நடக்கிறது. யுவன்சங்க...
சௌந்தர்யா ரஜினிகாந்தின் முதல் தயாரிப்பாக வெளிவரும் கோவா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் வரும் ஜனவரி 4-ம் தேதி நடக்கிறது.
யுவன்சங்கர் ராஜா இசையில், வாலி, கங்கை அமரன் 9 பாடல்கள் எழுதியுள்ளனர். எண்பதுகளில் வாலியும், கங்கை அமரனும் இணைந்து இளையராஜாவின் இசையில் எழுதிய வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே போன்ற படங்கள் பெற்ற வெற்றி நினைவிருக்கும். இப்போது ராஜாவின் வாரிசு காலத்திலும் இந்த கவிஞர் கூட்டணி தொடர்கிறது.
இந்த பாடல்களை ஜனவரி 4-ம் தேதி வெளியிடுபவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
வழக்கமாக ஆடியோவை சத்யம் திரையரங்கில் வைத்து வெளியிடுவார்கள். ஆனால் இந்த முறை, சன் மியூசிக் சேனலில் வைத்து வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கோவா படத்தை சன் பிக்சர்ஸ் பேனரில் வெளியிட வேண்டும் என ரஜினி விரும்பியதும், அதற்கு சன் உடனடியாக ஒப்புக் கொண்டதும் ஏற்கெனவே வெளியான தகவல்கள்.
Comments
Post a Comment