ஹிந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற "ஹவா' படம், "ராஜலீலை' என்ற பெயரில் தமிழில் வெளியாகிற...
ஹிந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற "ஹவா' படம், "ராஜலீலை' என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. இதில் தபு கதாநாயகியாக நடித்திருக்கிறார்.கணவனை விட்டுப் பிரிந்த இளம் நாயகி, தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் இமயமலை அடிவாரத்தில் வசித்து வருகிறார். ஓர் இரவு, பலத்த இடியுடன் கூடிய மழை பெய்கிறது. நாயகியின் வீட்டில் உள்ள தோட்டத்தில் இடி காரணமாக பூமியில் விரிசல் ஏற்படுகிறது. அதிலிருந்து, ஏற்கெனவே புதைக்கப்பட்ட ஒரு மனிதனின் ஆவி வெளியேறுகிறது. அந்த ஆவிக்கும் நாயகிக்கும் இடையே நடைபெறும் சம்பவங்களைக் கூறுவதே கதை. இதை திகில் கலந்து விறுவிறுப்புடன் இயக்கியிருக்கிறார் குட்டு தனோவா. நாயகி தபுவின் நடிப்பு, கிராஃபிக்ஸ் காட்சிகள், தீலீப்சென்}சமீர்சென் ஆகியோரின் மிரட்டல் இசை போன்றவை படத்தின் பலம். இந்தப் படத்தை குருராஜா இண்டர்நேஷனல் பிலிம்ஸ், ஜனவரி மாதம் வெளியிடுகிறது.
Comments
Post a Comment