மும்பையில் ஃபோட்டோ ஷூட்

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள "ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்காக இரண்டு வருடங்களை கழித்து விட்டார் ரீமா சென்.​ இப்படத்துக்காக வேறு எந்த ஒரு படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்த ரீமா,​​ தற்போது தமிழில் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.​ ஆனால்,​​ குறிப்பிடத் தகுந்த வாய்ப்புகள் இன்னும் கிடைக்கவில்லை.​ இதனால் கிளாமர் ஃபோட்டோ ஷூட் நடத்தி,​​ அதை தயாரிப்பு மற்றும் இயக்குநர் தரப்புகளுக்கு அனுப்பி வைக்க உள்ளார்.​ ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாக்களுக்கும் இந்த போட்டோக்களையே பயன்படுத்தப் போகிறாராம்.​ இதற்கான போட்டோ ஷூட் விரைவில் மும்பையில் நடக்கிறது.

Comments

Most Recent