சுயஉதவிக் குழுக்கள் குறித்த திரைப்படம்


சென்னை,டிச.22: சுயஉதவிக் குழுக்களை மையமாகக் கொண்டு "சக்தி பிறக்குது' என்ற திரைப்படத்தை மதுரா மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

​ இந்த நிறுவனம் சுயஉதவிக் குழுக்களை முன்னேற்ற பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.​ ​

​ திரைப்படத் தயாரிப்பாளர் உஷா ராஜேஸ்வரியின் பிரகரிதி ஜீவா மீடியாவுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

​ பெரும்பாலான காட்சிகள் மதுரையில் உள்ள சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்களின் இயல்பான நிலை,​​ உண்மையான வாழ்க்கை நிலை மற்றும் அவர்களைப் பற்றிய ஆய்வுகள் குறித்தும் திரைப்படமாக்கப்படவுள்ளது.

​ இந்தப் படம் 4 லட்சம் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் திரையிடப்படும் என்றார் மதுரா மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத் தலைவர் டாக்டர் தாரா தியாகராஜன்.

Comments

Most Recent