தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பிஸியாக இருக்கும் சமீரா ரெட்டி, மலையாளப் படத்தில் முதன் முறையாக நடிக்கிறார். மோகன்லால் ஜோடியாக நடிக்கும் இ...
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பிஸியாக இருக்கும் சமீரா ரெட்டி, மலையாளப் படத்தில் முதன் முறையாக நடிக்கிறார். மோகன்லால் ஜோடியாக நடிக்கும் இப்படத்துக்கு "கேசினோவா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மலையாளத்தில் நடிக்க கேட்டதும் முதலில் தயக்கம் காட்டிய சமீரா, பெரும் தொகையை சம்பளமாக தர தயாரிப்பு நிர்வாகம் சம்மதம் தெரிவித்ததும், உடனே ஒகே சொல்லி விட்டாராம். "பாடிகாட்' படத்துக்கு நயன்தாரா வாங்கிய ரூ.60 லட்சம்தான் மலையாள சினிமாவில் இதுவரை அதிகபட்ச ஹீரோயின் சம்பளமாக இருந்ததாகக் கூறப்பட்டது. இந்த சம்பளத் தொகையை முறியடித்து இருக்கிறதாம் சமீராவின் ஒப்புதல்.
Comments
Post a Comment