நாயகியை முத்தமிட 12 டேக் வாங்கிய சடகோபன் ரமேஷ்முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் இப்போது முழு நேர நடிகராகிவிட்டார்.

பட்டாபட்டி என்ற படத்தில் நடிக்கும் அவர், கேரள அழகி ஹரிணியுடந் ஒரு முத்தக் காட்சியில் நடித்தார். அந்த காட்சிக்கு 12 டேக் வாங்கினாராம்,சரியாக முத்தம் தர முடியாமல்!

சன்ரா மீடியா-பிலிக்கர் ஸ்டூடியோ சார்பில் வெங்கட்ரமணி தயாரிக்கும் இந்தப் படத்தை யுவராஜ் இயக்குகிறார்.

புகழ்பெற்ற ஒரு கிரிக்கெட் வீரர், 20 வருடங்களுக்குப்பின் தன் சொந்த கிராமத்துக்கு போகிறார். அப்போது அவர் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களே இந்த படத்தின் கதை. இதில் சடகோபன் ரமேஷ், கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷாகவே நடிக்கிறார்.

தன் சின்ன வயது காதலியை, 20 வருடங்கள் கழித்து அவர் சந்திப்பதாக ஒரு காட்சி. இதில் இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்க வேண்டும்.

இந்த காட்சி பற்றி சடகோபன் ரமேஷிடம் இயக்குநர் யுவராஜ் விளக்கியபோது, முத்தக்காட்சியில் நடிப்பதற்கு சடகோபன் ரமேஷ் தயங்கினாராம். படத்தின் கதைப்படி அந்த காட்சி அவசியம் (?!) என்று இயக்குநர் வற்புறுத்தியதால் பின்னர் நடித்தாராம்.

மிகுந்த உதறலுடன் சடகோபன் ரமேஷ் பயந்து கொண்டே முத்தக் காட்சியில் நடித்ததாராம்.

இதனால் காட்சி சரியாக அமையவில்லையாம். ரமேஷ் வெட்கப்பட்டதால் முத்தத்தை சரியாக எடுக்க 12 டேக் வாங்கி விட்டாராம். 12 டேக் வாங்கிய பின்னர் ஒரு வழியாக அந்தக் காட்சி படமாக்கி முடிக்கப்பட்டதாம்.

மறுநாள், சடகோபன் ரமேஷ் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் சம்பந்தப்படாத மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதுபற்றி விசாரித்ததில், 'ஆமாம்... முன்னே பின்னே பழக்கமில்லாத விஷயமாச்சே'என்கிறார் சிரித்தபடி.

சிக்சர் அடித்துப் பழக்கப்பட்டவரிடம் போய் செக்ஸியாக முத்தமிடுங்கள் என்று சொன்னால் உதறல் வராதா பின்னே..

Comments

Most Recent