வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்!பிளாக் பஸ்டர் என்ற சொல்லுக்கு சரியான அர்த்தம் என்னவென்று ஜேம்ஸ் கேமரூன் காட்டியுள்ளார்.

'இதுதான்டா படம்' என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட அனைத்து தகுதிகளும் நிறைந்த படம் 'அவதார்'தான் என மீடியா எழுதி வருகிறது.

இந்த நிலையில், இப்போது வசூலிலும் இந்தப் படம்தான் கிங் என்று சொல்லும் ஒரு அபார சாதனையை நிகழ்த்தியுள்ளது அவதார்.

வெளியான 17 நாட்களில் 1 பில்லியன் டாலர் என்ற வசூல் சாதனையைப் படைத்துள்ளது அவதார்.

இந்தப் படம் தயாரிக்க செலவிடப்பட்ட தொகை, 237 மில்லியன் டாலர்கள். கொட்டும் பனி, வேலை நெருக்கடி எதுவுமே இந்தப் படத்தின் வசூலைப் பாதிக்கவில்லை. அதுவும் புத்தாண்டு தினத்தில் அமெரிக்கா-கனடாவில் மட்டும் 69 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளது அவதார்.

மூன்றாவது வாரத்தில் 1,018,811,000 டாலர்களை வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது இந்தப் படம். கேமரூன் இதற்கு முன்பு எடுத்த டைட்டானிக் கடந்த 12 ஆண்டுகளில் 1.84 பில்லியன் வசூல் செய்துள்ளது. இதுவே இன்றுவரை உலகில் அதிகம் வசூல் செய்த படம். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் இந்த சாதனையை அவதார் முறியடித்துவிடும் என்று நம்புவதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தேதிக்கு, உலக சினிமா வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த நான்காவது படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அவதார்.

Comments

Most Recent