தயாரிப்புப் பணிகளில் தீவிர கவனம் செலுத்துவதற்காக இந்த ஆண்டு எந்தப் படத்திலும் நடிக்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம் ஆமிர்கான். 44 வ...
தயாரிப்புப் பணிகளில் தீவிர கவனம் செலுத்துவதற்காக இந்த ஆண்டு எந்தப் படத்திலும் நடிக்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம் ஆமிர்கான்.
44 வயதாகும் ஆமிர்கான் இதுகுறித்து கூறுகையில், நான் ரொம்ப டயர்ட் ஆகி விட்டேன். 3 இடியட்ஸ் படத்தின் புரோமோவுக்காக நாடு முழுவதும் அலைந்து திரிந்ததில் சோர்வடைந்துள்ளேன்.
தோபிகாட் படத்தின் ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்து விட்டேன். இந்த ஆண்டின் பிற்பகுதியில் அது வருகிறது. அதன் பின்னர் இந்த ஆண்டு எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன் என நினைக்கிறேன்.
தயாரிப்பாளராக என் வசம் தற்போது பீப்ளி லிவ், டெல்லி பெல்லி மற்றும் தோபிகாட் என மூன்று படங்கள் உள்ளன. இவற்றை சிறப்பாக முடிக்க வேண்டும்.
எனது படங்களை சர்வதேச சந்தையில் வெளியிட திட்டமிட்டு வருகிறேன். இதன் மூலம் உலக ரசிகர்களை வசீகரிக்க முடியும் என நினைக்கிறேன். அந்த வேலையில் தற்போது மும்முரமாக உள்ளேன் என்றார் ஆமிர்.
Comments
Post a Comment