பிரபல ஹாலிவுட் நடிகை மோனிகா பெலூசி இரண்டாவது குழந்தைக்கு தாயாகப் போகிறார். 45 வயதான பெலூசிக்கு ஏற்கனவே ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது....
பிரபல ஹாலிவுட் நடிகை மோனிகா பெலூசி இரண்டாவது குழந்தைக்கு தாயாகப் போகிறார்.
45 வயதான பெலூசிக்கு ஏற்கனவே ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது முறையாக பெலூசி தாயாகப் போகிறார் என்றும், வரும் செப்டம்பர் மாத வாக்கில் அவர் குழந்தையை பிரசவிப்பார் என்றும் அவரின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
பெலூசி, தனது இரண்டாவது கணவரான பிரெஞ்சு நடிகர் வின்சென்ட் கேசிலுடன் கடந்த 1999ம் ஆண்டு முதல் வாழ்ந்து வருகிறார். இவர்களின் 5 வயது பெண் குழந்தையின் பெயர் தேவா.
பலமுறை சர்வதேச அழகிகள் பட்டியலில் இடம் பிடித்த மோனிகா பெலூசி, 5 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பமாக இருந்தபோது இத்தாலியில் விந்தணு தானத்தை தடை செய்யும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment