'சுறா'வின் விலை 48க் கோடி !

48க்கு கோடி  ஆனைவிலை குதிரைவிலை அல்ல சுறாவிலை. வேட்டைக்காரன் வசூல் பல்ஸ் குறைந்திருக்கும்  நிலையில், விஜய்யின் 50வது படமான 'சுறா' வை குறைந்த பேரத்தில் 48க் கோடிக்கு சன் பிக்சர்ஸ் வாங்கிக் கொண்டதா கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது.

ஆனால் விஜய்யின் 50வது படம் என்ற விளம்பரத்தின் மூலம் வசூல் அறுவடையை அமோகமாக நடத்த சன் திட்மிட்டள்ளதாகவும் அதே கிசுகிசுப்புக்களில் அடிபடுகிறது.

இந்தப்படத்தைத் தயாரித்தவர் விஜய் படங்களின் வெற்றிப்படியினைத் தொடக்கி வைத்த 'காதலுக்கு மரியாதை' படத்தை தயாரித்த சங்கிலி முருகன். ஆனால் படத் தயாரிப்புப முடிந்ததும், படம் பாரத்தவர்கள் சொன்ன கமெண்ட்களால் கதிகலங்கி. நட்டமில்லா ஒரு விலைக்கு ஆஸ்கார் ரவிச்ச்திரனுக்கு விற்றுவிட்டாராம். ஆனால் வாங்கிய ஆஸ்காரின் அதிர்ஷ்டம் அந்தப்படம் வசூலில்ல சூப்பர் கிட்

இப்போதும் , கிட்டத்தட்ட அதே நிலைதான். வேட்டைக்காரன் படம் நினைத்தளவிற்கு வசூலாகத நிலையில், இந்தபடத்தை வாங்குவதற்கு ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்த சன் நிறுவனம், விலையில் பேரம் பேசத் தொடங்கியது. முடிவில் 48க் கோடிக்கு சங்கிலிமுருகனிடமிருந்து 'சுறா'வை சன் வாங்கியள்தாகத் தெரிகிறது. சங்கிலி முருகனும் கையைச் சுட்டுக் கொள்ளாமல் வந்தளவில் திருப்தி என்று வியாபாரத்தை முடித்துக் கொண்டாராம்.

Comments

Most Recent