ஜேசுதாஸுக்கு 70 வயது - எளிமையாக கொண்டாட்டம்பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் தனது 70வது பிறந்த நாளை இன்று எளிமையாக மூகாம்பிகை கோவிலில் கொண்டாடினார்.

பிரபல பின்னணிப் பாடகர் ஜேசுதாஸ். தாய் மொழியான மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளாக இவர் பாடி வருகிறார். இன்று ஜேசுதாஸுக்கு 70வது பிறந்த நாளாகும். இதையடுத்து தனது குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

1940ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி போர்ட் கொச்சியில் பிறந்தவர் ஜேசுதாஸ். இவரது தந்தை அகஸ்டின் ஜோசப். இவரும் ஒரு பாடகர் மற்றும் நடிகராவார். தாயார் எலிசபெத். தனது தந்தையிடமிருந்து இசையைக் கற்றுக் கொண்டார் ஜேசுதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent